அவள் இதழ்கள்

இளங் காலை வேளை
தடாகத்தில் பூத்து குலுங்கின தாமரை
வந்தாள் ஆரணங்கு அவள் ஆங்கு
தாமரைப் பூக்களை மெல்ல கொய்திட
இதோ என்ன அதிசயம்
அவள் திறந்த இதழ்மீது ஓர் வண்டு
அமர்ந்து பின் எழுந்து பின் அமர பார்த்தது
அவ்வண்டின் ரீங்காரம் கூட கேளாதவள்போல்
அந்த ஆரணங்கு.....அவள் சிந்தையெலாம் அவள்
காதலன் மீது ......
தாமரையை விட்டு இவள் இதழ் தேடி
வந்ததேன் வண்டு....
புதிய தேன்சிந்தும் தாமரை இதழ்தான்
அது என்று எண்ணியதோ அது ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jan-22, 8:48 pm)
Tanglish : aval ithalkal
பார்வை : 154

மேலே