அவளின் பிறப்பு

இலங்கையில்
பிறந்தவள் அல்ல
தேவதையின்
இளம் கையில்
பிறந்தவள்

கோயிலில் பிறந்தவள்
அல்ல
நாகர் கோயிலில்
பிறந்தவள்

பெண்ணுக்குப் பிறந்தவள்
அல்ல
கம்பன் பண்ணுக்குப்
பிறந்தவள்

பூவைக்குப் பிறந்தவள்
அல்ல
இளைஞர் காதுகளில்
பூவைக்கப் பிறந்தவள்

மங்கைக்குப் பிறந்தவள்
அல்ல
மேனகையின்
தங்கைக்குப் பிறந்தவள்

தாயின் கருவறையில்
பிறந்தவள் அல்ல
கோயில்
கருவறையில்
பிறந்தவள்

அன்னைக்குப் பிறந்தவள்
அல்ல
அன்னத்திற்குப் பிறந்தவள்

தந்தையால் பிறந்தவள்
அல்ல
பிரம்மன் செய்த
விந்தையால் பிறந்தவள்

மழலையாய்ப் பிறந்தவள்
அல்ல
தாகம் தீர்க்கும்
மழையாய்ப் பிறந்தவள்

விதையாய்ப் பிறந்தவள்
அல்ல
கவிதையாய்ப் பிறந்தவள்

இருவருக்குப் பிறந்தவள்
அல்ல
இறைவனுக்குப் பிறந்தவள்

கரையில் பிறந்தவள்
அல்ல
உழவர் கரையில்
பிறந்தவள்

எழுதியவர் : Kumar (18-Jan-22, 11:17 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : avalin pirappu
பார்வை : 110

மேலே