காய்கறி சிரிப்பு
கடைக்காரர்: நானே நிறுத்து போட்டா 50 ரூபாய் கிலோ. நீயே பொறுக்கினா 90 ரூபாய் கிலோ
வந்தவர்: நான் பொறுக்கி தரேன் , நீயே போடு, 60 ரூபாய் வச்சிக்க.
விற்பவர்: எதை எடுத்தாலும் கிலோ 60 ரூபாய்.
மூணு கிலோ வாங்கு, கால் கிலோ ஏதேனும் ஒரு காய் இலவசம்
ஒருவர்: அப்படீன்னா நான் நாலு கிலோ வாங்குறேன், அரை கிலோ காய் இலவசம் கிடைக்குமா?
விற்பவர்: உன் முகத்தை பார்த்தா அரை கிலோ கூட வாங்கறவன் மாதிரி தெரியல்ல, அப்புறம் நாலு கிலோவை பத்தி உனக்கு என்ன பேச்சு ?
வாங்குபவர் : ஏம்ப்பா ஒரு கிலோ கேரட் சரியக எடை காட்டியபின்னே ஏன் ரெண்டு காரட்டை கீழே எடுத்து வச்சுட்டிங்க?
விற்பவர்: நீதான் ரெண்டு காரட்டை அப்படியே ராவா எடுத்து வயித்தில் தள்ளிட்டியே.
வாங்குபவர்: புடலங்காய் நீளம் ரொம்ப சின்னது. ஆனா விலை தான் இரண்டு புடலங்காயாக இருக்கிறது.
விற்பவர்: ஆமாம் நீகூடத்தான், பார்த்தா குட்டி புடலங்காய் மாதிரித்தான் இருக்கே ஆனா பேச்சு மட்டும் அம்புட்டு பேசுறே.
வாங்க வந்தவர்: இந்த பீட்ரூட் பொரியலுக்கு நல்லா இருக்குமா இல்லை அல்வா செஞ்சா நல்லா இருக்குமா?
கடைக்காரர்: உனக்கு சர்க்கரை வியாதின்னா பொரியல் பண்ணி சாப்பிடு. இல்லைன்னா நிறைய சர்க்கரை நெய் சேர்த்து அல்வா பண்ணி சாப்பிடு. நாளைக்கே சர்க்கரை வியாதி வந்துடும். அவ்வளவு இனிப்பு இந்த பீட்ரூட்.
வாங்குபவர்: ஐயோ ஒரு கட்டு கொத்தமல்லி 30 ரூபாயா? இது அடுக்குமா?
கடைக்காரர்: அதனால் தான் அடுக்கி வைக்காமல் கீழேயே இடுக்கி வச்சிருக்கிறேன்.
வாங்க வந்தவர்: 100 ரூபாய் ஒரு கிலோ வெங்காயம் வாங்குவதைவிட சும்மா வீட்டில் படுத்திருப்பதே சிறந்தது.
கடைக்காரர்: இல்லேன்னா ரொம்ப வேலை செய்து கிழிக்கும் சுறுசுறு மனிதர் நீ. முகத்தை பார்த்தாலே வெங்காயம் உரிச்சுவிட்ட மாதிரி இருக்குது.
கடைக்காரர்: மொத்தம் 217 ரூபாய் ஆச்சு, 300 ரூபாய் கொடுத்தே, இந்தா ரெண்டு தக்காளி. சரியாய் போச்சு கணக்கு.
வாங்குபவர்:சேப்பங்கிழங்கு, கருணை கிழங்கு, வாழைக்காய், காரட், கத்தரிக்காய், அவரைக்காய், உருளை, சர்க்கரை வள்ளி கிழங்கு எல்லாம் சேர்த்து ஒரு அரை கிலோ கொடு.
கடைக்காரர்: ஒரு பானையை கொண்டா, எல்லாத்தையும் வேக வச்சு பொங்கலுக்கு கூட்டு சமைச்சு கொடுக்கிறேன். வந்துட்டார்யா பொங்கலுக்கு காய்கறி வாங்க....
ஆனந்த ராம்