கரோனா நேரம்

டாக்டர்: எவ்வளவு நாளா உங்களுக்கு கரோனா ?
நோயாளி: அது தெரிஞ்சா உங்களை எதுக்கு கேட்கறேன்

நர்ஸ்: டாக்டர் இந்த நோயாளி கண்ணை திறந்து திறந்து மூடுறார்
டாக்டர்: அது ஏன்னு அவரிடம் கேட்டியா?
நர்ஸ்: கேட்டால் வாயை திறந்து திறந்து மூடுறார்.
டாக்டர்: அவர் தொழில் என்ன?
நர்ஸ்: கம்பெனி லிஃப்டுல அவருக்கு வேலை. லிப்ட் கதவை திறந்து மூடறது.

நோயாளி: நீங்க கொடுத்த மாத்திரை என் உடம்பை ஏதோ பண்ணுது டாக்டர்
டாக்டர்: நான் உனக்கு மாத்திரை கொடுக்கவில்லை. இந்த நர்ஸ் தான் கொடுத்தாங்க
நர்ஸ்: இந்த மாத்திரை நீங்க சொல்லி தான் டாக்டர் இவருக்கு நான் கொடுத்தேன்
டாக்டர்: ஐயோ நர்ஸ், இந்த மாத்திரை உனக்காகத்தான் கொடுத்தேன். நோயாளிக்கு ஏன் கொடுத்தாய்?
நர்ஸ்: எனக்கு எதுக்கு மாத்திரை டாக்டர்? நான் நல்லா குண்டாகத்தானே இருக்கிறேன்.
டாக்டர்: அதனால் தான் இந்த மாத்திரை உனக்கு எழுதி கொடுத்தேன்.

நோயாளி: என் வீட்டில் நாலு பேருக்கும் கரோனா டாக்டர்
டாக்டர்: உங்க வீட்டில் இருப்பது மொத்தம் நாலு பேர்தானே. பின்ன நாலு பேருக்கு தானே வரும்.

நோயாளி: உங்க பில்லில் கடைசியில் ஏதோ டிஸ்கோவுன்ட் கொடுத்திருக்கீங்களே, எதற்கு?
டாக்டர்: ஒரே வீட்டில் மூணு நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாலாவது நோயாளிக்கு சிகிச்சை இலவசம்.

நோயாளி: டாக்டர் நான் இரண்டு முறை தடுப்பூசி போட்டும் ஏன் என்னை இந்த கரோனா நாய், மன்னிக்கணும், கரோனா நோய் தாக்கிடுச்சு?
டாக்டர்: அட நீங்க ஏங்க என் வயிற்றெரிச்சலை கொட்டிக்கிறீங்க? நான் ரெண்டு தடுப்பூசி தவிர ஒரு பூஸ்டர் தடுப்பூசியும் போட்ட என்னையே இந்த கரோனா விட்டுவைக்கவில்லையாப்பா. அப்புறம் வெறும் சாதாரண தடுப்பூசியால் என்ன பண்ண முடியும்?

டாக்டர்: உங்கள் கணவர் ஒரே அறையில் தான் இருந்தார் என்று கூறுகிறீர்கள். பின் உங்களுக்கு எப்படி கரோனா தொற்றிக்கொண்டது?
மனைவி: அவர் ஒரே அறையில் தான் இருந்தார். ஆனால் நான் ஒரே அறையில் இல்லையே.

டாக்டர்: காய்ச்சல் இருந்தா இந்த மாத்திரை. ஓய்ச்சல் இருந்தா இந்த மாத்திரை. எரிச்சல் இருந்தா இந்த மாத்திரை. குளிர் இருந்தா இந்த மாத்திரை.இருமல் இருந்தா இந்த மாத்திரை. உடல் வலி இருந்தா இந்த மாத்திரை. எதுவும் இல்லை என்றால் இந்த மாத்திரை.
நோயாளி: எதுவும் இல்லை என்றால் சாப்பிடும் மாத்திரை மட்டும் போதும் டாக்டர். வேறு எதுவும் வேண்டாம். என்னிடம் இப்போது பணம் கூட இல்லை.
டாக்டர்: நீங்க போட்டிருக்கும் தங்க செயின் போதும். எதுக்குங்க இந்த பொல்லாத பணம்?

நர்ஸ்: உங்களுக்கு ஆக்ஸிஜன் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களிடம் உள்ள அதிகப்படியான ஆக்ஸிஜனை சிலிண்டரில் பிடிக்கப்போகிறோம்.
நோயாளி: பிடிச்சிக்கோங்க ஆனால் ஆக்ஸிஜனை கொஞ்சம் உள்ளே மிச்சம் வையுங்க. பின்னாடி என்னிடம் பிடிச்ச ஆக்சிஜெனையையே எனக்கு வித்துருவீங்க.

டாக்டர்: இதில பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை.மருந்து கொடுக்கிறோம். பட்டால் பாக்கியம், இல்லாவிட்டால் லேகியம்.

நர்ஸ்: டாக்டர் இந்த நோயாளி மருந்தும் சரியாக எடுப்பதில்லை. உணவையும் சரியாக எடுப்பதில்லை. ரெஸ்டும் சரியாக எடுப்பதில்லை.
டாக்டர்: அப்போ என்னதான் உருப்படியாக எடுக்கிறார்?
நர்ஸ்: எங்க எல்லாரது உயிரையும் எடுக்கிறார்.


டாக்டர்: நாளை உங்களை டிஸ்சார்ஜ் பண்ணுகிறோம்.
நோயாளி: மிக்க மகிழ்ச்சி டாக்டர். வீட்டுக்கு போனாலே எல்லாம் சரியாகிவிடும்.
டாக்டர்: எல்லாம் சரியாக போனதால் தான் வீட்டுக்கே அனுப்புகிறோம்.


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jan-22, 5:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 200

மேலே