நகைச்சுவை சிற்றுண்டி

கணவர்: தினமும் இட்லி சாப்பிட்டு போர் அடிக்குது.ஞாயிற்று கிழமையாவது மசால் தோசை பண்ணலாமே?
மனைவி: தினமும் இட்லி பண்ணி பண்ணி எனக்கும் போர் அடிக்குது. இன்னிக்காவது நீங்க எனக்கு மசால் தோசை செய்து தரலாமே?
கணவர்: இன்னிக்கு எனக்கு இட்லியே போதும். மிளகாய் பொடி இருந்தாலே போதும். வேறு எதுவும் வேண்டாம்.
******
அம்மா: ஏண்டா ரகு, தட்டில் போட்டு கொடுத்த உப்புமா ஆறிப்போய்விட்டது. ஏன் இன்னும் சாப்பிடவில்லை?
ரகு: சூடு பண்ணா மாத்திரம் நேற்றைய உப்புமா இன்றைய உப்புமா ஆகுமா? ஏம்மா இதுமாதிரி ஒரே டிபனை இரண்டு நாள் கொடுத்து படுத்துறீங்க?
*******

ரவி: எங்க வீட்டில் இன்னிக்கு காலை சிற்றுண்டி, பூரி கிழங்கு
ராமன்: எங்க வீட்டில் இன்று மூன்று வேளைக்குமே பூரி கிழங்குதான்
*******

தாத்தா: ஏன்டா மண்டு, கையிலே செல்போனோட எவ்வளவு மணி நேரந்தான் இருப்பாய்?
பேரன்: நீங்க கையில் தடியை பிடிச்சிண்டு நாள் முழுவதும் இருக்கறப்போ நான் ஆறு மணி நேரம் செல்போன் பிடிச்சுண்டு இருக்கக்கூடாதா தாத்தா?
********

பாட்டி: ஏண்டி, உன் பொண்ணு நான் சொல்லற பேச்சை கொஞ்சம் கூட கேட்கவே மாட்டேங்கறா?
பெண்: அவ காதில் இயர் போனோட இருக்கிறப்போதான் நீ அவளுடன் பேசுகிறாய். பாவம் குழந்தைக்கு எப்படி காதில் கேட்கும்?
******

எஜமானி: ஏம்மா பார்வதி, உன் கணவருக்கு கரோனா என்று சொன்னியே , பின்ன எப்படி இன்று வீட்டுக்கு வேலைக்கு வந்திருக்கே?
பார்வதி: அவரை வண்டியில் இன்னும் பத்து பேரோட ஆஸ்பத்திரி இட்டுண்டு போய்ட்டாங்க. இன்னும் பத்து நாள் கழிச்சு தான் அனுப்புவாங்க. வீட்டில போர் அடிக்கிறது ஆதனால் தான் வேலை செய்ய வந்துட்டேன். ஒண்ணும் பயப்படாதீங்க, இதோ பாருங்க என்னுடைய RT PCR ரிப்போர்ட், நெகடிவ்.
ஆமாம் உங்க வீட்டுக்காரர் எங்கேம்மா?
எஜமானி: அவரையும் உன் கணவரை போல பத்தோடு பதினொண்ணா வண்டியில் கூட்டிக்கிகிட்டு போய்ட்டாங்க. அவருக்கு பொசிட்டிவ் எனக்கு நெகடிவ். வா, ஜாலியா பேசிண்டு வேலைய பாக்கலாம்.
*******

காய்கறி விற்பவள்: எல்லா கீரையும் எளசா பிரெஷா இருக்கு. வாங்கிக்கோங்க
வீட்டுக்காரி: எல்லா கீரையும் வாங்கினா யார் சமைக்கறது? நாலு கட்டு சிறுகீரை மட்டும் கொடு.
******

கணவன்: ஞாயிறு ஒரு நாளைக்காவது கொஞ்சம் திக்கான காபி கொடேன். மத்த நாளெல்லாம் ஒரே தண்ணி காபி.
மனைவி: திக்கான காபி குடிச்சா என் மனசு திக்கு திக்குன்னு அடிச்சிக்கிறது. அதனால் தான் கொஞ்சம் தண்ணியா காபி போடறேன்.
கணவன்: உனக்கு தான் திக்கு திக்குன்னு அடிக்குது. எனக்கு இந்த தண்ணி காபியை குடிக்கும்போதெல்லாம் பக்கு பக்குன்னு அடிக்குதே. இனி நானே காபி கலந்து குடிச்சிட்டு உனக்கு மீதி டிகாக்ஷன்ல தண்ணி காபி தரேன்.


ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Jan-22, 10:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே