தக்கணை வேள்வி தவங்கல்வி - ஆசாரக் கோவை 3

சிந்தியல் வெண்பா.

தக்கணை வேள்வி தவங்கல்வி யிந்நான்கும்
முப்பா லொழுக்கினாற் காத்துய்க்க உ'ய்'க்காக்கால்
எப்பாலு மாகா கெடும். 3 ஆசாரக் கோவை

பொருளுரை:

ஆசிரியர்க்குத் தட்சணை கொடுப்பது, யாகம் பண்ணுவது, தவம் செய்வது, கல்வி ஆகிய இந்நான்கினையும் மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு காத்துச் செய்து வரவேண்டும்.

இவ்வாறு ஒருநெறியில் செலுத்தாவிட்டால் எவ்வுலகத்திலும் இந்நான்கும் தனக்குப் பயனாகாமல் கெட்டு விடும்.

கருத்துரை:

தட்சணை முதலியவற்றைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்க வேண்டும்.

இப்பாடல் மூன்றடியாலும், தனிச்சொல் இல்லா மலும் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-22, 5:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே