பாராட்டு பாமணி டாக்டர் கன்னியப்பருக்கு பாராட்டு

எண்சீர் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்


ஆயிரமா யிரம்பேர்க்கு தொண்டு.தாயாம்

******கண்மருத்து. வர்கன்னி. யப்பர்.ஐயா

ஆயிரம்பா தமிழ்யாப்பி லின்று யாத்த

******அரியபணி பாராட்டி புதுவை மன்றம்

ஆயிரம்பொன் கிழிக்கீடாய் கொடுத்த பட்டம்

******பாமணிமுன் னர்பாவ லரென்றும் தந்தார்

தாயினது தமிழ்மொழியின் சிறப்பை வையம்

******* மகிழத்தந் தக்கன்னி. யப்பர் வாழி


டாக்டர் கன்னியப்பர் முன்னம் தமிழ் யாப்பில் சீரிய ஐந்நூறு தமிழ்ப் பாடல்
இயற்றியதற்கு புதுவை பைந்தமிழ்ச்சோலை மன்றம் அவரைப் பாவலர்
என்று அழைத்து கௌரவித்தது. இன்று கன்னியப்பர் சிறப்பான ஆயிரம்
யாப்பிலக்கணப் பாடல் எழுதி முடித்தமைக்கு தமிழ்ப் பாமணி பட்டம்
கொடுத்து சிறப்பித்துள்ளது. எழுத்து தளத்தைச் சேர்ந்த அனைவரும்
அவரை பாராட்டி மகிழ்விப்போமாக. வாழிய டாக்டர் பாவலர் பாமணி
கன்னியப்பர்

எழுதியவர் : பழனி ராஜன் (21-Jan-22, 8:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 599

மேலே