கடுக்காய்ப் பிஞ்சு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வனதுர்க்கிச் சேய்க்கு மணித்தயிலம் பூசி
அனலிற் பொரித்தாங்(கு) அருந்தத் - தினமுமலச்
சிக்கலக்க டுப்பநின்ற சீதமறுங் காற்றுகைத்த
முக்கலக்க டுப்பிருக்கு மோ

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை ஆமணக்கு நெய்தடவி தீயில் வறுத்துத்தூள் செய்து அப்போதே உண்டால் மலச்சிக்கலும், வெளுமையான சீதமும் நீங்கும்; மூலவாயுவால் பிறந்த முக்கல், ஆசனக்கடுப்பு நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே