இலுப்பைமரம் வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புண்ணும் புரையுமறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பி ருக்குமோ - பெண்ணேகேள்
நீரிழிவும் ஏகும் நெடுமோமை மூலத்தாற்
போரடர்,க டுப்புரத்தம் போம் 1

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

மந்தம் அரோசிம காசூலை சர்வசுரம்
விந்துநஷ்டந் தாகமொடு மெய்யிளைப்பும் - முந்த
அலுப்பைப்பெற் றேகும் அளகத்திற்(கு) ஆகா
இலுப்பைக்குச் சூடதிகம் என் 2

- பதார்த்த குண சிந்தாமணி

துவர்ப்புடைய இலுப்பைவேர் புண், புரை வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு, இரத்த கிராணி, அக்கினி மாந்தம், சுவையின்மை, வாதசூலை அனைத்து வகை சுரம், விந்துநட்டம், தாகம், உடல் அயர்வு, போன்றவற்றை நீக்கும். தலைமுடிக்கு இது ஆகாது, இது ஒரு சூட்டுப் பொருளாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 7:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே