அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

புவியின் தோற்றம் அறியாமலே
பிறந்து மனிதன் வாழுகிறான்

பரபரப்பாய் அலைந்து திரிந்து
பாடுபட்டுத் தேடிக் குவிக்கிறான்

பகிர விரும்பா மனத்தாலே
பாசம் காணாது தவிக்கிறான்

பிறப்பின் காரணம் தெரியாமலே
இறப்பை அவனும் அனைக்கிறான்

விதையின் மூலம் அறியாமலே
விதைத்து ஒருவன் முயல்கிறான்

நதியின் மூலம் அறியாமலே
நீரின் வருகையால் மகிழ்கிறான்.

இறைவனை உணரா கவிஞனும்
இயற்கை உந்த வடிக்கிறான்

பரமனைக் காணா பாமரனும் - அவன் படைப்பைக் கண்டு களிக்கிறான்

மனிதம் காக்க வருவதும்
மனம் ரசிக்க வருவதும்

தன் பிறப்பு சொல்லி வருவதில்லை
அன்பும் தடைகள் அறிவதில்லையே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந� (23-Jan-22, 1:58 pm)
பார்வை : 127

மேலே