நவரச நாயகன்
புத்தன் தந்த அழகு புன்னகையுடனே
சித்தன் எங்கள் ஆரோ தேஜஸ்
உத்தமமாய் உயரக் கனவு கண்டு
கெத்தாகத் தூளியிலே படுத்திருந்தான்
இந்திர லோகத்துச் சுந்தரியாம்
மந்திர ஆடியில் பார்த்தாளாம்
சந்திர முகப் பிள்ளையின் மேல்
தீராக் *காதல்* கொண்டு வந்தாளாம்
அவள் அழகிய நாட்டியம்
*அற்புதம்* என்றானாம் - ஆனாலும்
அயோத்தி இராமன் போலத்
தொட *பயந்* தானாம்
அஞ்சாத சிங்கம்போலே
*வீரம்* உள்ளவனாம்
ஆனைக்கு *கருணை* காட்ட
முதலையை வென்றவனாம்
அந்த சுபி மகன் *பயங்கர*
முன் *கோபி* யாம்
ஆனாலும் அம்மாவிடம்
*சிரித்து* பேசி மகிழ்வானாம்.
அப்பா அகில் தோளில்
*சாந்தமாக* இருப்பானாம்.