தென்றல்விடு தூது

மல்லிகையின் மணத்தையெல்லாம் தனதாக்கி ;
புல்லினது பனிநீரால் குளிர்ச்சிப்பெற்று;தென்றிசை மலைக்காண விரைந்துசெல்லும், தென்றலே செப்புகிறேன் என்மொழியை, சற்றே நில்.
அன்றொருநாள் பிரிந்துசென்றாள் என்னைவிட்டு இன்றுமென்றன் நெஞ்சிலுள்ளாள் வஞ்சியவள்; தாமரை முகத்தவளை நாடி என்மனம், தா மரைபோல் தாவினதே !அறிவாய் நீ ;
செங்கமலம் வெட்கமுற பங்கயமும் நாணமுற,
தேங்குலாவும் பூ முகத்தாள் புன்னகைத்தாள் ;
தத்தையவள் பிறைநுதலை கண்டிட்டே ஒரு குவளை, முத்தனைய விழிதிறந்து ஏமாந்ததே நிலவென்று !இத்தகைய எழிலநங்கை கண்டிட்டால் நீயுமே மெத்தவே எடுத்துரைப்பாய் என்னிலையை அப்போதே !
கொஞ்சும் கிள்ளையவள் கோளமொழி கேட்டிடவே பஞ்சனைய என்நெஞ்சம் படும் பாட்டை நீ அறிவாய்.
ஒண்டமிலின் தனிச்சுவையை ஒத்த அவளிடம் விண்டு திரும்பு விரைந்து !

எழுதியவர் : (26-Jan-22, 3:03 pm)
சேர்த்தது : Vallalperumal E
பார்வை : 83

மேலே