உற்ற பேராசை கருதி அறனொரூஉம் ஒற்கம் இலாமை இனிது - இனியவை நாற்பது 39

இன்னிசை வெண்பா

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39

- இனியவை நாற்பது

பொருளுரை:

பிச்சைக்குச் சென்று, இரந்து உண்பவன் கோபிக்காமல் இருப்பது மிக இனியது.

ஊரின் ஒதுக்குப் புறமாய்க் குடியிருந்து, துன்பம் மிக அடையாதிருக்கும் மாட்சிமை இனியது.

மிகுந்த பேராசையைக் கருத்தினுள் கொண்டு, அறவழியினின்று நீங்குதற்கு ஏதுவாகிய மனத்தளர்ச்சி இல்லாதிருத்தல் இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-22, 6:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே