அவள் அவன் மீது கொண்ட காதல்

என்னருகில் நீ இருந்தால்
நிலவின் குளிர்ச்சி என்னைவிட்டு
நீ பிரிந்தால் என்னை வருத்தும் வாடை
மலர் நான் என்றால் மதுவல்லவோ நீ
கண்ணே என்று என்னை நீஅழைத்தாய்
கண்ணின்மணியே நீதானடா என்பேன்னான்
நூல் நான் என்றால் அதைகோர்த்து
மாலையாய் என்னுள் நீ
நீ இன்றி நான் வேறில்லையே
கணமேனும் கூட என்னைவிட்டு பிரிந்திடாதே
என்னவனே என் காதல் தெய்வமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Jan-22, 1:52 pm)
பார்வை : 190

மேலே