காதலும் காலமும்
காதல் செய்யும் போது
பொய்கள் பல சொன்னேன்
உண்மை என்று நம்பி
என் மீது காதல் கொண்டாய்...!!
திருமணம் முடிந்த பிறகு
உண்மைகளை சொல்லி
வருகிறேன்...
நீ பொய் என்று நம்பி
என்னுடன்
சண்டை கொள்கிறாய்...!!
காலத்தின் கோலத்தை
நினைத்து பார்க்கிறேன்
சிரிப்பதா... அழுவதா...என்று
புரியாமல் தவிக்கிறேன்...!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
