அப்பனுக்கும் உண்டு

அப்பனுக்கும் உண்டு...

வா தாயே வா!
வந்தாய் ,
காலம் கடந்தே
வந்தாய்!
வந்ததும் நீ
போவது முறையோ?

வந்திட்டாய்,
வந்த நீ
உன் புகழ் பாடும்,
என் கவிதைகளையும்
எடுத்துச் செல்.

சென்றே நீ !
உன்னவன்
என் அப்பன் ,
கேட்க உரக்கவே
படித்து விடு.

அப்பன் அவன்,
அதை கேட்டே முகம்
சுளித்திடுவான்!

சொல் அவனிடம்!
என் உள்ளத்தில்
வந்து அமரச் சொல்,
அவனுக்கும் உண்டு
என்னிடம்,
அவன் புகழ் பாடும் கவிதைகள் பல.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Feb-22, 9:14 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 75

மேலே