வார்த்தைப் பிரசவங்கள்
பாராட்ட மனமில்லை என்றாலும்...
விமர்சனம் செய்ய மட்டும்...
விரைந்தோடி வருபவர்கள்.
அறிந்திருக்க மாட்டார்கள்,
ஒவ்வொரு கவிதைகளும்
எழுதுபவனின் பார்வையில்
இன்னுமோர் பிரசவமென்று.
பிழைகளை ஆராய்ந்து...
பிரித்து...
தரம் பார்த்து.!!
பின்...
பித்தனாய் நினைத்து
எழுதியவன் காதில்..
இடித்துரைப்பது ...
ஏன் என அறிவீரா.?!
உன்னிடம் கேட்டா
உள்ளத்தை எழுதுவேன்
எனக்கு தோன்றியதை
எழுதி விட்டுப் போகிறேன்.
அதில்...உன்
பேரறிவை தேடாதே,!
தேடினால்...!!??
தொலையவும் நேரலாம்.!
ஏனென்றால் அது...
எனக்கான பாதை.!
வேண்டுமென்றால்...
நீங்களும் எழுதலாம்...
பிழை சொல்ல-
வரமாட்டேன்.
கதையோ...
கவிதையோ...
எனக்கானதை நண்பா
ஏன் நான் விட வேண்டும்.?