மன்னிக்க வேண்டினார்
வித்தியா சாகர்
வங்க தேசத்தின் கல்விமான்
ஒரு நாள் அவர் நாடகம்
பார்த்துக் கொண்டிருந்தபோது
நாயகன் , நாயகியை அடித்துத்
துன்புறுத்தியதால்
கடும் கோபம் கொண்டு
கால் செருப்பை கழற்றி
கதா நாயகனை
கடுமையாக அடித்து விட்டார்,
பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
பதறிப்போனார்கள்
அடித்த செருப்பை நாயகன்
அன்போடு அரவனைத்து
எடுத்து வந்து கண்ணில் ஒற்றி
என் நடிப்புக்குக்கிடைத்த-மிகப்பெரிய
வெகுமதி என்று கூறி
வித்தியா சாகரின் பாதம் தொட்டு
வணங்கி நின்றார்
வித்தியாசாகர் வேதனைபட்டு
வெட்கி, தலை குனிந்தார் ,
நாடகம் நிஜம்போல் இருந்ததால்
நிலை தடுமாறி விட்டேன் என்றவர்
அரங்கத்திலுள்ளோர் அனைவரிடமும்
இரு கை கூப்பி மன்னிக்க வேண்டினார்