மானுடம்
கூரையில்லா நினைவுகளின்
அடைமழைக் காலம்
சிறுவயது நாட்கள்.!!
கள்ளமின்றி எங்கும்
கரையா மகிழ்வலை
நுரையாய் வழிந்தோட...
துள்ளித்திரிந்த காலமது.!!
பின்...
வளர வளர...
வளராமல்...
அவைகள் மட்டும் ஏனோ...
அப்படியே...
தேய்பிறையாய் நாளும்
தேய்ந்தே போனது.!!
எத்தனை மறைத்தும்...
எட்டிப் பார்த்து விடுகிறது.!
மழையை போல
மறைக்க முடிவதில்லை
மனதை ஒரு நாளும்.!
தூர தேசங்களில்
தொலைவாய் இருந்தாலும்.!
தொலைபேசி வழியாக
தொடர்பு கொள்ள முடிந்தாலும்.!
எல்லாம் இருந்தும்
ஏதோ குறைகிறது.!!
புரியாத வாதம் கொண்டு,
தெரியாத கதைகள் உண்டு.
வகைவகையாய்...
வந்து விழும்
வார்த்தைகளாய் சகுனங்கள்.!!
பல்லி விழுந்தால்.!
பாம்பு கனவில் வந்தால்.!
விலங்குகள் முதல் மனிதர்கள் வரை
எதிரில் எவர் வரலாம்.!
என்பது வரை..!!
இழந்தவை எல்லாம் பெறுவதற்கு
என்ன கனவு காண வேண்டும்.?
நம்புவர்களை மட்டுமே
சோதிக்கும் கடவுளாய்.!!
நண்பனுக்கு மட்டுமே
துரோகம் செய்யும் நண்பனாய்...
பட்ட காலிலேயே
பட்ட அடியின் வலியாக...
சில...
முகச்சாயம் கலையப் பார்க்கையில்...
மூச்சு விட முடிவதில்லை.!!
பிடித்தவர்கள் விலகும் வலி அதை
படிப்பவர்க்கு தெரியாது...
நடிக்கிறார் என்பார்கள்.!!
நகைத்து சிரிப்பார்கள்.!!
கதைத்து போனவர்கள்
காரியமென்றல்...
காலையில் வருவார்கள்.
விழுந்த கனி
இறந்து போகவில்லை.!!
மீளும் ஒருநாள்
எருவாகவோ...இல்லை
மரமாகவோ..!!