மறக்க வரம் வேண்டும்

மனப்பாடம் செய்கிறேன் - உன்னை
மறுபடி காணக்கூடாதென்று...
ஆனால்...
மறுமுறை பார்க்கையில்- அனைத்தும்
மறந்தே போயிருந்தது.!!!

முயற்சி
திருவினையாக்குமாமே!?!?
நானும்
முயற்சித்தேன் உன்னை
தெருவே வினையாகிப் போனது
எனக்கு.!!!

திரும்ப வர மாட்டேன் என்றாய்
ஆனால்...
தினமும்...
தவறாமல் வருகிறாய் கனவில்.!!!

நிலவும் - எனக்கு
தொடும் தூரம் தான்
நீதான் தெரிகிறாய் வெகு தூரமாய்..!!!

நீளமும் தூரமும்
அளக்கத் தெரிந்த பின்னும்
கணிக்கத் தெரியவில்லை - உன்
கடைவிழி பார்வையை.!!!

மருத கருப்பு...

எழுதியவர் : மருத கருப்பு (4-Feb-22, 8:43 am)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 72

மேலே