பாரதி ௨

பாரதி....!
நீ ஒரு புது கவி...
நீ ஒரு யுக கவி...!
காணி நிலம் வேண்டும்...பராசக்தி காணி நிலம் வேண்டும்
என்று காணி நிலத்துக்காய் - நம்
தேசத்துக்காய் பராசக்தியிடம் சண்டையிட்டாய்.
"அச்சமில்லை...அச்சமில்லை..அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழினும்
அச்சமில்லை...அச்சமில்லை...அச்சமென்பதில்லை"யே என்று
ஒவ்வொரு இந்திய இளைஞ்சனுக்கும் தன்மான ரத்தம் பாய்ச்சினாய்.
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்" என்று
அடிமைக்காய் கிரங்கினாய்.
"சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்றும்
"கங்கை நதி புரத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்" என்று
நாட்டின் ஒருங்கிணைப்புக்காய் குரல் கொடுத்தாய்.
"குயில் பாட்டு" பாடி இயற்க்கை கவியானாய்.
"பாஞ்சாலி சபதம்"கூறி பாரதம் படைத்தாய்.
"ஓடி விளையாடு பாப்பா" என்று குழந்தை கவியானாய்.
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சூளுரைத்தாய்.
"நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?" என
அழுது புலம்பினாய்.
"உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா
என் நெஞ்சில் உத்திரம் கொட்டுதடி" என்று
கண்ணம்மாக்காய் உருகினாய்.
"நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்" என்று
அவள் காலடியில் சரணடைந்தாய்.
நீ எழுதாத காவியமா?
நீ சொல்லாத சந்தக் கவிதைகளா?
அத்தனையும் சந்தனக் கவிதைகள்.
சரித்திரக் கவிதைகள்.
உன் பார்வையின் வீச்சம் எங்களுக்கு ஒளிவிளக்காயிற்று...
உன் மீசையின் முறுக்கு எங்கள் நரம்புகளை முறுக்கேற்றியது...
உன் நடையின் வேகம் எங்கள் ரத்தத்தை சூடேற்றியது...
பாரதி....
உனக்கு மரணமேயில்லை
உன்னால் தமிழுக்கும் அதே நிலை.
வாழ்க நீ எம்மான்.
வாழ்க....வாழ்க..
என்றென்றும் நீ வாழ்க..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-Feb-22, 7:37 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 619

சிறந்த கவிதைகள்

மேலே