மாறியது ஏனோ
"அன்று என் கண்ணின் மணி
நீ என்றாய் ,
இன்று என்னை பிடித்த சனி
என்கிறாய்,
அன்று என் வானத்து நிலவு
நீ என்றாய் ,
இன்று காலை சுற்றிய அரவு
நீ என்கிறாய்,
அன்று என் சொல்லின் வடிவம்
நீ என்றாய்,
இன்று பயனற்ற படிகம் நீ
என்கிறாய்,
அன்று என் நெஞ்சின் சிந்தனை
நீ என்றாய்,
இன்று நஞ்சென எனை நிந்தனை
செய்கின்றாய்,
நெஞ்சம் மாறியது ஏனோ?
காதல் என்பதும் பொய் தானோ?"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
