பாரதி ௧
பாரதி...
முண்டாசு கவியே...முறுக்கு மீசையே...
உன் கண்கள் சிவந்தபோதெல்லாம்
பரங்கியரின் பீரங்கிகள் வெடித்துச் சிதறின...
உன் மீசை துடித்தபோதெல்லாம் மீசையில்லா
ஆங்கிலேயரின் முகங்கள் சிதைந்து போயின.
அடிமை இந்தியாவின் ஆணிவேரையே அசைத்து
சுதந்திர இந்தியாவின் ஸ்வாசக்காற்றானாய்.
உந்தன் புகைப்படம் காணும் போதெல்லாம் - இந்தியா
உன்னுள் ஐக்கியமானது கண்டு வியந்திருக்கிறோம்.
தலையில் வெள்ளை கூறாய் முண்டாசு...
கழுத்தைச் சுற்றிய துணி இடது தோளில் விரிந்து...
முகமும் நடுப் பகுதியும் அகண்டு
இரண்டுபக்கம் கருப்பு கோட்டுக்கிடையில்....
கடைப் பகுதி குறுகி உன் இதயத்தோடு முடியும்
உன் படத்தைப் பார்க்கும்போது
இந்தியாவின் வரைபடம் போல்...
இமயமாய் முண்டாசும்...
தோளில் பரவிய துணி வடகிழக்குப் பகுதியாய்...
இதயமாய் தென்னகமும்.
ஓ!......நீ இந்தியாதான்.
தமிழா.....
தமிழ்நாடு உன் இதயத்தில் - உன்
தமிழோ இப்பார் முழுதும்.