சாந்திசாந்திசாந்தி

உன் உடுப்பில் இரண்டிலொன்றை
மற்றவற்கு கொடு.
இது கிறித்துவம்.
உன் லாபத்தில் பத்திலொரு பங்கை
ஏழைக்குத் தானம் செய்.
இது இஸ்லாமியம்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய உள்ளம்
இது இந்துத்துவம்.
அத்தனை மதத்துவம் சொல்வதும்
ஒரே தத்துவம்.
சக மனிதனை மனிதனாய் மதி...
இயற்கையை இயற்கையாய் போற்று - அப்போதுதான்
உனக்கான சொர்க்கவாசல் திறக்குமென்று.
படிப்பதற்கும்...கேட்பதற்கும் சுலபமாய்த்தெரியும்.
அதற்குள் மறைந்திருக்கும் சூட்சமம்தான் நம்
வாழ்வின் ஆதார முடிச்சு - அதைத்
தேடுவோம்...
நாடுவோம்...
போற்றுவோம்.
அப்போதுதான்
மனிதன் மாமனிதாவான்.
"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காண்பி"
இதை கடைபிடிக்க
முயலுவதுதான் தவம்.
இந்த தவத்திற்கு
தெய்வங்கள் தேவையில்லை...
வேதங்கள் தேவையில்லை...
ஆச்சார அனுஷ்டானங்கள் தேவையில்லை.
இயல்பாய் இருத்தல்.
நீ நீயாக இருத்தில்.
உன்னையே உனக்குள் தேடல்
ஒரு நாள் இருநாளல்ல
வாழ்நாள் முழுதும்..
அப்போதுதான்
மாமனிதன் தெய்வமாவான்.
இதுதான் தவம்.
தேடுதல் தொடங்கிவிட்டேன்.
புதையல் கிடைக்குமா?
"கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே"
அசரீரி கெடுகிறது.
சாந்தி..சாந்தி...சாந்தி...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Feb-22, 8:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 120

மேலே