சிந்திப்போமா
பணம் இருக்கும் வரை வரும்
மரியாதை எல்லாம் - செத்தப்
பிணம் ஆனபின் வந்தால்தான்
பிறந்ததின் பயன் - அதற்கு
மனம் சிந்தித்தல் வேண்டும் - அதன்படி
செயல்படவும் வேண்டும்.
இல்லையெனில்
குணம் கெட்ட கழுதையென
ஊர் தூற்றும் - உலகம்
தினம் தூற்றும் - உறவு
எப்போதும் தூற்றும்.
மனதில்
சினம் கொள்ளாமல்
கொஞ்சம் சிந்தித்தோமானால்
புத்தி தெளிவடையும்
சித்திகளெல்லாம் கைகூடும்.
சிந்திப்போமா?