ஏய் நிலவே
ஏய் நிலவே!
உன் நிழலடி வெளிச்சம் வெள்ளையடி, இந்த நிலத்தினில் உனக்காக காத்திருப்பேன் நித்தமடி.
பல பகல் இரவு கடந்தேனடி உன் முழு பிறை முகத்தை பார்க்கத்தானடி.
காதல் என்ற ஆழ்கடலில் நான் மூழ்கி தத்தளிக்கும்போது துறைமுகம் சேர எனக்கு கிடைத்த ஒளி என்ற பிறை முகம் நீ தானடி …
உன் பிறை ஒளியால் என்னை கரை சேர்ப்பாயா ?
இல்லை மறுபடியும் காணல் நீராய் பிறை கரைந்து என்னை மறந்து தான் போவாயா தேய் பிறையாய்?
ஆனாலும், இத் தலைவன் முப்பது திங்கள் ஆனாலும் காத்திருப்பேன் உன் மதிபிறை முகத்தை மறுபடியும் காண தான் அதே காதலுடன், ஆவாலுடன் வளர்பிறையாய் !! ஏய் நிலவே !!!
கவிஞர்
முனைவர் ஏ. மணிகண்டன், Ph.D.,
சேலம்.122
+91-9843579446