காதல் 14
காதல் என்ற அழகான வார்த்தையை
சொல்லி விட்டால்
காலம் எல்லாம் என்னை காதலிக்க
வந்து விட்டால்
என் உயிருக்கு உயிரானவள் என்
உயிரினிலே கலந்தவாள்
என் கோபத்தை ரசிப்பவள்
என் இதயத்தில் என்றென்றும்
வாழ்பவள்
முதுமையிலும் என்னை
காதலிப்பவள்
தலைமுடி நரைத்தாலும் என்னை
நேசிப்பவள்
கண்இமை மூடும் வரை என்னோடு
சேர்ந்து இருப்பவர்
தினம் தினம் உன்னை
காதலிக்கிறேன்
உன் கைப்பிடிக்க காத்திருக்கிறேன்
காதலை சொல்ல வந்தேன்
காதலர் தின வாழ்த்துக்கள்