அருந்தமிழே அணுத்துகள்

குறளடி வஞ்சிப்பா

உலகினிலே தோன்றியவைகள்
எவைகளினது பெயர்களதுவும்
இல்லாமலும் இருந்திடுமோ
ஆதித்தமிழ் பொருள்தந்திடும்
சொல்லின்களின் குவியல்களாய்
முன்பே
தோன்றிய எழில்மிகு தமிழின் சொல்லதின்
அரணுள் கட்டு பட்டே யாவுமே (க)

இனிவுலகிலே எவ்வார்த்தையும்
புதியதெனவே ஆக்கினாலுமே
அவையாவுமே அரசத்தமிழ்
அகராதியின் விதையெனவுமே
அதனைநாமுமே நாடிதேடினால்
மிடுக்கு
தமிழினை விரும்பி கற்றே வாழும்
மக்களுள் எழிலாய் தோன்றி நிற்குமே (உ)

கோள்கோள்களும் கதிரவனின்
வெடிப்பினிலே சிதறிபடியே
விழுந்தபோதே அவ்வெடிப்பிலே
தமிழ்மொழியின் உயிர்மெய்களும்
ஓசையினது ஒலிவடிவினில்
பிழம்பாய்
புவியில் தோன்றி ஞாயிறின் ஒளியுடன்
குழலதின் இனிமையில் செழித்து ஆளுதே (ங)

எவ்வகையின் நிலையாயினும்
பொய்யினாலே செய்தநல்லதாய்
கட்டுக்கதை என்றாயினும்
புற்றுநோயாய் பிறமொழியெது
வந்தமுக்கியே பம்மாத்தினை
செய்தாலும்
ஆறாம் பூதமாய் வாழ்ந்திடும் அருந்தமிழ்
அயருமே தவிர ஆற்றல் குறையுமோ (ச)

நெருப்பினையோ காற்றினையோ
நீரதுவின் வேகத்தினை
வானத்தின் தூரத்தினை
பூமியினது பொறுமையினை
எவற்றாலும் மாற்றயிலுமோ
அதுபோல்
ஆற்றலாய் பிறந்த பைந்தமிழ் மிடுக்கை
கூகையின் மொழிகள் என்றும் பணியுமே. (ரு)
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (14-Feb-22, 7:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 27

மேலே