பூமிச் சருக்கரைக் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மேகமறும் உள்ளுருக்கு வெட்டை அனல்தணியும்
போகுமே மூலம் புகலக்கேள் - பாகுமொழிப்
பொன்னனையாய் பூமிச் சருக்கரைக்கி ழங்குக்கு
வன்ன வுடல்பருக்கும் வாழ்த்து
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் மேகம், உருக்கு வெட்டை, சுரம், மூலம் ஆகியவை நீங்கும்; உடல் பருக்கும்