என் கண்மணி

யாரடி நீ எனக்கு...
எதற்காக இங்கு வந்தாய்...
எதுவாகினும் எனக்கென்று நீ நின்றாய்
நான் ஒரு கோமாளி என இருக்க
என்னை ஓர் ராஜாவாகா பார்க்க ஆசை கொண்டாய்
சொகமென்னும் முள்மேல் வீற்று இருந்த என்னை
சந்தோசமென்னும் மழையில் நனைய வைத்தாய்
உன்னுடன் இருக்கையில் என்னை நான் இழக்கிறேன்
நான் முழுவதும் நீ ஆகிறேன்
உனது அழுகையை பார்க்கும் போது
ஒவ்வொரு முறையும் இறக்கிறேன்..
உன்னிடத்தில் சோகத்தை கண்டதில்லை
உன்னிடத்தில் காமத்தை கண்டதில்லை
நீ காட்டும் கோபம் கூட பொய்யானது
உனது அன்பு மட்டுமே நிலையானது
எனது வாழ்வின் மறுபக்கத்தை காட்டினாய்
என்னை மனிதனாக வாழ வைத்தாய்
இவ்வாறு இருக்கையில் ஏன் என்னிடம்
சொல்லாமல் என்னை விட்டு நீங்கினாய்
துக்கத்திலும் உன் நினைவுகள்
தூக்கத்திலும் உன் கனவுகள்
ஒவ்வொரு நொடியும் காத்து இருக்கிறேன்
உன்னை மீண்டும் பார்க்க முடியாதா என?
உன்னை இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
இல்லை, அது நான் இறந்தால் தான் முடியும் என்றால்
வந்துவிடு என் கல்லறைக்கு மாறாத உன் அன்புடன்......

எழுதியவர் : ManiRaj (16-Feb-22, 4:52 pm)
சேர்த்தது : Mani Raj
Tanglish : en kanmani
பார்வை : 217

மேலே