நினைவுகள்

ஆயிரம் ஆயிரம் இரவுகள்
மறக்க முடியா கனவுகள்
எந்தன் மனதில் எங்கும் உனது நினைவலைகள்
காலங்கள் மாறின
உருவங்கள் மாறின
ஆனால்
நினைவுகள் நிலையானது
மனதின் வலி அதிகமானது
உன்னை காணாத வேளையில்
நிமிடமும் வருடமானது
எந்தன் ஒவ்வொரு செயலிலும் உன் பிம்பங்கள்
என்னை முற்றிலும் இழந்தேன்
யாவும் நீ ஆகினேன்
உனக்காக காத்து இருப்பதும் ஒரு சுகம் தான்
ஆனால்
அதிகமான சுகமும் வலி தான்
உன்னை பார்க்க நினைக்கும் மனதோடும்
நிஜமில்லா கற்பனைகளோடும் நிஜமான அன்போடும்
காத்து இருக்கிறேன் உனக்காக.......

எழுதியவர் : ManiRaj (16-Feb-22, 4:48 pm)
சேர்த்தது : Mani Raj
Tanglish : ninaivukal
பார்வை : 392

மேலே