என்னவளே

உன் புருவ
மை அழகில்...
உன் பருவத்தை
நானறிந்தேன்...

தெறித்த
உன் சிரிப்பில்
குரலினை
அறிந்துகொண்டேன்...

உன் கொலுசொலி
ஓசையிலே ....
உன் நளினம்
புரிந்துகொண்டேன்...


இரு கைகள்
நீட்டியே....
என்னை
நோக்கி வந்த போது ...

தூக்கியபின் தான்
தெரிந்தேன்...
உன் இடை
மெலிந்ததென்று...

முத்தமழை
தந்துன்னை
அப்பி அணைக்க...

போதும் "அப்பா"
என்ற போதே...
மழலை
உன் பாசம்
புரிந்துகொண்டேன்.

எழுதியவர் : மரு.ப. ஆதம் சேக் அலி (17-Feb-22, 2:02 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : ennavale
பார்வை : 269

சிறந்த கவிதைகள்

மேலே