வெயில்
அனைவருக்கும் பொதுவான அற்புதம் நீ..
எல்லோரும் உன்னை
அரவணைக்காத போதிலும்...
காடு கழனியில் இருப்பவன் தனிமைத் துணை நீ..
கணிணி அறையில் இருப்பவனின் தூரம் நின்று நகர்பவன் நீ..
உலக அழகியின் ஆழ்ந்த அலங்காரத்தில் மிளிராத அழகை, நடைபாதை கடை நங்கையின் மீது மாலை மஞ்சளில் பூசிச் செல்கிறாய் நீ..
உன் உன்னதம் உணராமல் ஒதுங்கி செல்பவர்கள் ஓராயிரம் இருந்தாலும், ஒன்றுமில்லாத மனிதர்களுடன் உறவாடி நிற்கிறாய் நீ என்றென்றும்..