வறுமை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

இளைஞர்களே!
வறுமை என்பது
நிரந்தரமான நோயல்ல தற்காலிகமான நோய்தான் முறையாக போராடினால்
போலியோவை போல்
முற்றிலும் ஒழித்து விடலாம்....

வெயிலுக்கு பின் நிழலும் ...
புயலுக்குப் பின் அமைதியும்.... மேட்டுக்குப் பின் பள்ளமும்....
இரவுக்குப் பின் பகலும் ......
இருப்பதுபோல்
வறுமைக்குப் பின் வளம் உள்ளதை மறந்து விடாதே .....!

இன்று வளமுடன் வாழும்
எல்லோரும்
பிறக்கும்போதே
வளமுடன் பிறந்தவர்கள் அல்ல...

ஒரு பெண்
வலியோடு போராடித்தான்
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்...
ஒரு ஆண்
மூச்சோடு போராடித்தான் முத்துக்களை கடலிலிருந்து எடுக்கிறான் ....

ஒரு விதை கூட
மண்ணோடு
போராடி வரும் போதுதான்
செடியாகி
மரமாகிறது.....

உன்னிடம் போராடும் குணம் வந்துவிட்டால்
வளம் என்ன?
அந்த வானமே!
உன் காலடியில் தான் .....

கடலை பார்க்கும்போதெல்லாம் இவ்வளவு தண்ணீர்! என்று ஆச்சரியத்தில்
உறைந்திருபபாய்...
கடல் என்பது
ஆகாயத்தில் இருந்து
அப்படியே வந்தது அல்ல.....
பல மழை துளிகள்
ஒன்று சேர்ந்து ஓடையானது
பல ஓடைகள் ஒன்றுசேர்ந்து
ஆறானது
பல ஆறுகள் ஒன்றுசேர்ந்து கடலானது.....

படிப்பில்லை
படித்த படிப்புக்கு
வேலை இல்லை
உதவி செய்ய
உறவினர்கள் இல்லை
சொத்து இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு
புகை பிடித்துக் கொண்டு
மது அருந்திக்கொண்டு
இருப்பதால் நீ
வறுமையை
ஒழித்து விட முடியாது........!

கிடைத்த வேலையை
தலைவிதி என்று
செய்யாமல்.....இதை வைத்துக்கொண்டு
ஏதாவது
சாதிக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும்...

உழைத்த பணத்தில்
ஒரு பகுதியை
சேமித்து வைக்காமல் இருப்பது.....
உழைக்காமல் இருப் பதை விட கேவலமானது என்பதை
நீ உணர வேண்டும் ......

தடைகளை படிகல்லாக்கு...
தோல்வியே வெற்றிக்கு உரமாக்கு..... துன்பத்தை துணிவோடு போராடு இன்று
மழைத்துளியாய் இருக்கும் நீ!
நாளை
நான்கு பேர் பார்த்து
ஆச்சரியப்படும்
கடலாய் கண்டிப்பாக மாறுவாய்.....!!!

*கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Feb-22, 10:26 pm)
Tanglish : varumai
பார்வை : 41

மேலே