என்னில் பூத்த புது மலரே 555

***என்னில் பூத்த புது மலரே 555 ***
ப்ரியமானவளே...
விருதுசீலை கையில் பிடித்து
விண்த்துளியில் நீ ரசித்து நடனமாட...
எனக்கும் ஆசை உன்
கரம் பிடித்து நடனமான...
நீ எனக்கு கரம் பிடித்து
சொல்லி கொடுத்தால்...
மண்ணில் பூத்த மலர்கள்
எல்லாம் விண்த்துளியில் நனைகிறது...
என்னில் பூத்த நீயோ
சிரிக்க மறுக்கிறாய்...
உன்னை
நினைக்கும் போதெல்லாம்...
என் கன்னம் மட்டும் சுடுகிறது
உப்பு நீரின் வெப்பத்தில்...
எதற்காகவோ நீ
அரசமரம் சுற்றி வருகிறாய்...
நானோ
உன்னை சுற்றிவருகிறேன்...
அத்தி பூத்தாற்போல் உனக்குள்
நான் ஓர்நாள் மலர்வேனென்று...
அந்தநாளில் நீயே சொல்வாய்
என்னிடம் உன் காதலை...
ஒற்றை பனைமரத்தில்
ஊஞ்சல் ஆடும்...
தூக்கினான்
குருவிகூடு போல...
என் இதயம் மட்டும் உன்னை
நினைத்து ஏக்கத்தில் வாடும்...
காத்திருப்புகளுடன் நான்.....
***முதல்பூ .பெ .மணி .....***