இசையும் அவளும்..!!
இசைப் பொழிந்திட பொழிந்திட
அவள் மனமும் நனையத் துடிக்குது..!!
கல்லிலும் மண்ணிலும் பொழியும்
மழைத்துளிகள் இசை தூண்டுதே..!!
காட்சிகள் எவ்வளவு அழகான
அதை ரசிக்கும் மனம்
இல்லாத போது கடலில் விழும்
மழை போல் தான்..!!
விழுந்து விழுந்து இசையை இரசித்தல்
ஒரு சில காரணத்தால் இன்று
இசையை தான் கண்ணீரில்
ரசிக்க ஆரம்பித்தாள்..!!
கன்னி அவள் காதலில் விழுந்ததால்..!!

