உயர்ந்த இயற்கை
வஞ்சிவிருத்தம்
தானுண்ட நீரை தந்திடும்
தேனுநிகர் சுவையில் இருந்திடும்
மானிடர் சூடினை போக்கிடும்
யானையின் தீனியிதன் மட்டையாம்
கொத்தாய் கூந்தலில் காய்த்திடும்
முத்துபோல் முதிர்ந்தால் விழுந்திடும்
கத்திபோல் மட்டையும் இருந்திடும்
வித்தோ இருபிளவாய் இருக்குமே
கொடியே இதனின் தண்டாம்
செடிபோல் சிறியதில் தெரியும்
கிடுகிடு எனவே வளர்ந்திடும்
கடித்திட இனிப்புமிகு கிழங்காம்
பிஞ்சியில் காரமாய் இருக்கும்
கஞ்சிக்கு சிறந்த துணையாம்
நெஞ்சுள் எரிச்சலை தந்திடும்
கொஞ்சம் குறையினும் சுவையில்லை
கருவும் தனியாய் இதனுள்
பருவம் கடந்தால் கெட்டிடும்
பொரித்தும் உணவாய் உண்பர்
கருவே இல்லாமல் அறிவியலால் .
----- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
