நீயும் வந்து விடு

நீயும் வந்து விடு.

காலை நேரம்
கடற்கரை ஓரம்.

காலையில் எழுந்து
வந்திடுவேன்,
அலைகளின் கீதம்
கேட்டிடுவேன்,
கதிரவன் உதயம்
பார்த்திடுவேன்,
கவலைகள் யாவும்
கரைந்து விடும்.

தினம் தினம்
நீயும் வந்து விடு,
என்னுடன் நீயும்
சேர்ந்து விடு.

கடலின் நடனம்
பார்த்து சலிக்காது,
அலைகளின் கீதமும்
கேட்டு சலிக்காது.

காலையில் எழுந்து
வந்து விடு,
கடற்கரை அழகில்
உன்னை நீ
மறந்து விடு.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Mar-22, 8:53 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : neeyum vanthu vidu
பார்வை : 169

மேலே