ஹைக்கூ கவிதை
💘💘💘💘💘💘💘💘💘💘💘
*காதல் ஹைக்கூ*
படைப்பு *கவிதை ரசிகன்*
💘💘💘💘💘💘💘💘💘💘💘
அவள் ஜிமிக்கியில்
அடிக்கடி சிக்கிக் கொள்கிறது
என் மனசு
கோலம் போடுகிறாள்
அழகாக இருக்கிறது
அவள் கோலம்
இளையராஜாவின் இசையை
மிஞ்சி விடுகிறது
அவள் கொலுசின் ஒலி
தண்ணீர் சுமந்து வருகிறாள்
தழும்பி வடிகிறது
அவள் அழகு
குத்து விளக்கில்
ஒளி மங்குகிறது
அவள் அருகில் செல்கையில்
பூக்கள் பறித்து பிறகும்
செடி அழகாக இருக்கிறது
அவள் அருகில் நிற்கையில்
*கவிதை ரசிகன்*
💘💘💘💘💘💘💘💘💘💘💘

