பப்பு பாடல்-1
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
கண்ணே நீ வாடா
கனியே நீ வாடா
பொன்னாரம் புதுராகம்
கண்ணூறங்கு நீ கண்ணூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
பனி நீரில் நீளும் பகல் போலவே
கலையாத கடல் நீர் அலை போலவே
சிந்தைக்கு எட்டா சிலை நீயடா!
உன் சிரிப்பொன்றே வாழ்வின் சிறப்பாகும்டா
கண் நினையாதே நெளியதே
கலையதே கண்ணே கண்ணூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
வெயிற்கால வேலை வேர்க்கின்றதோ
குளிர்க்கால வாடை தாக்கின்றதோ
என்னாசை ரோஜா நீ தானடா
உனக்காக தான் என் வாழ்நாளடா!
வெண்மேகம் மழை வீசும்
வெந்நீரும் மணம் வீசும் - வாடாதே ராசா
வந்தூறங்கு நீ வந்தூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
கற்காலம் தாண்டி கலிகாலமாச்சு
கடிகார நேரம் காலத்தின் மூச்சு
உழைச்சாலும் இங்கே உதவாதுடா
உண்மைக்கே இங்கு மறுப்பேரடா
நெல் விதைச்சாலும் விளையாது
முளைச்சாலும் பிழைக்காது
நடுங்காம வாடா நானீருக்கேன்
நல்லோரும் வாழ வழியீருக்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
வானத்து மேகம் நில்லாதது
வையத்தின் வாழ்வும் பொல்லாதது
வாய்ப்புக்கே ஓடி வேர்க்காதேடா
வந்தாலும் ஏய்க்கும் ஏற்காதேடா
மலருக்குள் தேன் வைத்தான்
மார்புக்குள் பால் வார்த்தான் - மாலைக்குள்
வாடா வந்தூறங்கு நீ வந்தூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
பொன்னோவியம் நீ பொற்காவியம்
திங்கள் தீண்டாதொரு செஞ்சூரியன்
நெஞ்சத்தில் உனை நான் வையேனடா
பாசத்திலும் பாவம் செய்யாதேடா
பூவுக்கும் மணமுண்டு
பூஜைக்கும் பலனுண்டு புலரும் முன்னே
வந்து கண்ணூறங்கு நீ கண்ணூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
முளைச்சாலும் பிழைக்காது
நடுங்காம வாடா நானீருக்கேன்
நல்லோரும் வாழ வழியீருக்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
வானத்து மேகம் நில்லாதது
வையத்தின் வாழ்வும் பொல்லாதது
வாய்ப்புக்கே ஓடி வேர்க்காதேடா
வந்தாலும் ஏய்க்கும் ஏற்காதேடா
மலருக்குள் தேன் வைத்தான்
மார்புக்குள் பால் வார்த்தான் - மாலைக்குள்
வாடா வந்தூறங்கு நீ வந்தூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
பொன்னோவியம் நீ பொற்காவியம்
திங்கள் தீண்டாதொரு செஞ்சூரியன்
நெஞ்சத்தில் உனை நான் வையேனடா
பாசத்திலும் பாவம் செய்யாதேடா
பூவுக்கும் மணமுண்டு
பூஜைக்கும் பலனுண்டு புலரும் முன்னே
வந்து கண்ணூறங்கு நீ கண்ணூறங்கு!
ஆராரிரோ ஆரிராராரிரோ!
ஆராரிரோ ஆரிராராரிரோ!