வாழ்க்கை சுமை
வாழ்க்கை சுமை
வாழும் காலம் முழுதும் துன்பங்கள்
உள்ளம் முழுதும் தாங்காத் துயரங்கள்
மனம் முழுதும் குமுறும் எண்ணங்கள்
உண்மை நிலையைக் கூற நினைக்கையிலே
உறவைச் சொல்லிக் கூவிடுமே உள்மனம்
அவை தந்த உரிமைகள் வந்த உணர்வுகளை
மனதினில் அழுத்திக் கொண்டு அழுதிடுமே
ஒன்றுக்கு இருமுறை எண்ணிப் பார்க்கையிலே
மனதில் உள்ள மகிழ்ச்சியும் மறைந்திடுமே
உள்ளமும் ஊமையாகி உடலும் தளர்கையிலே
கண்மூடிச் சாய்ந்து மூலையில் முடங்கையிலே
மயங்கி கிடக்கும் உள்ளுணர்வுகள் நினைக்கும்
மாயவன் செய்யும் லீலைகளை யார் அறிவார்
சென்றுவிட்ட மகிழ்ச்சியை மீண்டும் யார் தருவார்