மச்ச விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
மேவுகின்ற மச்ச விநாயகன் மாற்றமிலா
தேவுடென இச்சையொடு தேடியே - நோவின்றி
எங்களை ஏற்றமொ(டு) என்றென்றும் வைத்திருக்கும்
தங்கம் அவனைத் துதி! 1
மச்சத்தின் மேல்நின்று நர்த்தனம் மேவுகின்ற
மச்ச விநாயகன் மாற்றமிலா - இச்சையொடு
நல்வாக்கு தந்தே நமக்குத்தான் தாராள
செல்வாக்கும் தந்திடுவான் இன்று! 2
மச்சத்தின் மேல்நின்று வால்பிடித்து ஊஞ்சலாடும்
மச்ச விநாயகன் மானசீக - இச்சைகொண்டு
நல்வாக்கு நல்கிடுவான் நன்கு; மனசாட்சி
செல்வழியில் நல்லதையே நாடு! 3
மேவுகின்ற மச்ச விநாயகன் மாற்றமிலா
தேவுடென இச்சையொடு தேடியே - நோவின்றி
எங்களை ஏற்றமொடு என்றுமே வைத்திருப்பான்;
தங்கம் அவன்தாளைப் போற்று! 4
விநாயகர் பட உதவி - தின மலர்