மங்கள விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்
என்ஐயன் மங்கள நல்விநாய கன்தோற்றம்
என்றென்றும் காணக் கிடைக்காதாம் - இன்னமுத
மாட்சிமையாய் என்றும் கணநாதன் என்றனுக்கு
காட்சி தருவான் கனிந்து! 1
பளபளக்கும் மங்களவி நாயகன்தாள் போற்ற
வளமையொடு பொன்,மங் களமாய் - அளவின்றி
அள்ளித் தருவான் அவன்கருணை; அன்னவனை
உள்ளம் மகிழ்ந்து வணங்கு! 2
விநாயகர் பட உதவி - தினமலர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

பதிலாக வேண்டும்...
மெய்யன் நடராஜ்
02-Apr-2025

முட்களின் பரிவு...
தாமோதரன்ஸ்ரீ
02-Apr-2025
