இனிதின்பம் நல்கிடவே இங்கே,நீ வாராயோ - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
மனதோடு பாடுகின்ற பாட்டுத் தானே
மனமெல்லாம் நிறைந்திருக்கும் என்றே சொல்வேன்!
கனவெல்லாம் உன்னைத்தான் காண்கின் றேனே
காதலியே உன்னையன்றி யாரும் இல்லை!
தனித்தன்மை கொண்டவளே தங்கம் உன்னைத்
தழுவிடவே உள்ளமதில் ஆவல் கொண்டேன்!
இனிதின்பம் நல்கிடவே எண்ணம் பெருக்கி
இங்கே,நீ வாராயோ என்றன் அன்பே!
- வ.க.கன்னியப்பன்