மாவிலிங்க மரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சுரங்கடியின் தோஷந் தொலையாத வாதம்
உரம்பெறும்வி ஷங்கள் ஒழியும் - அரமுங்
கருமா வடுவயிலுங் கண்டஞ்சுங் கண்ணாய்
ஒருமாவி லிங்குக்(கு) உரை
- பதார்த்த குண சிந்தாமணி
மாவிலிங்க மரத்தினால் சுரம், கடிவிஷங்கள், வாத நோய்கள், பாம்பின் விடம் ஆகிய இவைகள் போகும்