அழிஞ்சில் மரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அழிஞ்சிலது மாருதத்தை ஐயத்தைத் தாழ்த்தும்
ஒழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சீழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

அழிஞ்சில் மரமானது வாத, கப நோய்களைப் போக்கும்; பெருநோயை நீக்கும் . பித்தத்தை அதிகரிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே