👸மங்கை என்ற ஒன்றுக்கே👑

மாயவரும் மயங்கி
மாலையிட செய்யும்
மாதவியின் தங்கை அவளோ......

மயிலாடும் வீதியிலே
மதிமயங்க செய்யும்
மங்கை அவள் அழகோ........

மனைவியாகி மரண நேரத்தில்
மாயம் செய்யும்
மந்திரவாதி அவள் செயலோ......

பாதியில் வந்து உடல்
பாதியாகி மீதியாகி
இறுதிவரை காத்திருப்பவளோ.....

இவள்
மங்கை என்ற ஒன்றுக்கே
மகுடம் சூட்ட வேண்டுமோ....👑👑
மணிமகுடம் சூட்ட வேண்டுமோ......👸👑

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (15-Mar-22, 8:20 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 52

மேலே