பித்தனாய் வீதியில் அலைகிறேன் 555

***பித்தனாய் வீதியில் அலைகிறேன் 555 ***
நெஞ்சமானவளே...
உன் கூந்தலில் உறவாடும் பூக்களும்
என்னை ஏளனம் செய்கிறது...
காற்றோடு கலந்து செல்லும் மணம்
என்னை சேர்வதில்லை என்று...
விரட்டிவிட்டாய்
உன் இதய வீட்டைவிட்டே...
பித்தனாய்
வீதியில் அலைகிறேன்...
சுமையாக
நினைத்ததில்லை ஒருநாளும்...
நெஞ்சில் இருக்கும்
உன் நினைவுகளை...
உன்னுடன் வாழ்ந்த நினைவுகள்
உயிரில் கலந்துவிட்டது...
எங்கயோ மறைந்துகொண்டு என்
கவிதைகளை வாசிப்பவள் நீ...
என்னை வாசிக்க
மறுப்பதென்னவோ...
மழைக்காலத்தில் கலைந்து செல்லும்
மேகத்தை கண்டு ரசித்திருக்கிறேன்...
என்னுள் இருக்கும் உன் நினைவுகள்
கலையாமல் இருக்க...
துடிக்கிறேன்
நான் தினம் தினம்...
வெளிச்சம் இல்லா
என் வாழ்வில்...
வெளிச்சமாக நீ
வராமல் இருந்திருக்கலாம்...
அந்திவானில் தோன்றி
மறையும் வானவில் போல்...
நீயும் வந்து
மறைந்துவிட்டாய் என்னை மறந்து...
என் வாழ்வின்
விதியும் வலியதோ...
தினம் நனைகிறது
வெந்நீரில் என் இமைகள்.....
***முதல்பூ. பெ .மணி .....***