நீ கொடுத்த வலிகள் போதும் எனக்கு 555

***நீ கொடுத்த வலிகள் போதும் எனக்கு 555 ***
அன்பே...
நீ என்னிடம்
பேசாத நாட்களில்...
எதையோ இழந்தது
போல ஒரு உணர்வு...
அன்று முழுவதும்
தெளிவில்லாத மனம்...
பிரிவு
உன்னோடு மட்டும்தான்...
நாம் பழகிய
நினைவுகளோடு இல்லை...
துக்கத்தில் எனக்கு
துணையாக நின்றவள் நீ...
தேடுகிறேன் குழப்பத்தில்
உன்னை காணாமல் இன்று...
என்னுள் புதைந்த ரகசியம்
நீயும் உன் நினைவுகளும்தான்...
உன்னை நினைக்க ஆரமித்தாலே
என்னை மறந்துவிடுகிறேன்...
எத்தனை யுகங்கள் நினைவுகள்
தொடரும் தெரியவில்லை...
உன்னை
நினைக்கும் நிமிடங்கள்...
நான் இறக்கும் நிமிடங்கள்
வரையாவது நிலைக்கட்டும்...
உன்னிடம் சண்டையிட்டு
தனிமையில் இருக்கும்வேளை...
என்னை நானே
வசைபாடி கொள்கிறேன்...
நீ கொடுத்த
வலிகள் போதும் எனக்கு...
வா சமாதானம் செய்து
கொள்வோம் நீயும் நானும்...
என்னுயிர் சகியே.....
***முதல்பூ .பெ .மணி .....***