காமன்..!!

அவள் பின்னங்கழுத்தில்
பிறப்பு எடுத்து என் கண்ணுக்கு
மட்டும் புறப்படுகிறான்
கலியுக காதலன் காமன்..!!

அவள் நாடித்துடிப்பு அதிகமாக
என் நரம்பு எல்லாம் அருந்து
போகிறது நவரசத்தையும் அவள்
முகத்தில் காண்கிறேன்..!!

விடியத் துடிக்கும் இரவை கண்டு
வேகம்தான் குறைய மறுக்கிறது
பக்குவப்படுத்திய பதனி போல்
பாவை இவள் தேகம் எறிய கண்டேன்..!!

கல்லுளிமகன் காமன் அவன்
என்னையே தொந்தரவு செய்கிறான்
மங்கையை கண்டு மனதில்
அவன் குழந்தை ஆகிறேன்..!!

எழுதியவர் : (29-Mar-22, 1:57 pm)
பார்வை : 39

மேலே